மக்கள் மனங்களை வென்ற மாவட்ட அதிபர் திடீர் ஓய்வு!

Report Print Malar in அரசியல்

1995ஆம் ஆண்டு கிரான் குள பிரதேசத்திலே இடம்பெற்ற அனர்த்தத்திலே, அகற்ற முடியாமல் இருந்த உயிரிழந்தவர்களின் சடலங்களின் பாகங்களை எமது உத்தியோகத்தர்களுடன் இணைந்து துணிகரமாக சென்று அகற்றியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் என மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பதவியில் இருந்து மா.உதயகுமார் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

என்னை பொறுத்தவரையில் நான் சமூகத்தோடு சமூகமாக இருந்து சேவையாற்றுபவன்.

அதேபோல இந்த மாவட்டத்திலே சுனாமி பேரலையினால் பல அவலங்கள் இடம்பெற்ற போது, இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், காயப்பட்டவர்களை மீட்டெடுப்பதிலே அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வளிப்பதிலே எமது உத்தியோகத்தர்களுடன் இணைந்து நான் செயற்பட்டிருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.