காணாமல் போனவர்கள் புலிகளால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை உறுதிசெய்த பெற்றோர்! கோட்டாபய

Report Print Ajith Ajith in அரசியல்

போரின்போது காணாமல் போனோர் தொடர்பில் அவசியமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளால் அவர்களின் அமைப்பில் பலர் பலாத்காரமாக சேர்க்கப்பட்டமை மற்றும் அவர்களின் அமைப்பில் சேர்ந்துக்கொண்டவர்கள் போன்ற விடயங்களை பெருமளவான பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கோட்டாபய கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகம் விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களில் காணாமல் போனதாக கூறப்படும் 20ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.

எனினும் அவர்களுக்கு மரணச்சான்றிதழ்கள் வழங்கப்படும் முன்னர் அவசியமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்கிறது என்று ஜனாதிபதியின் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைப்பாடு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம் தெளிவாகக் கூறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...