சீனாவில் தங்கியிருக்கும் இலங்கை மாணவர்கள் தொடர்பில் கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in அரசியல்

சீனாவின் உஹூவான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்கும் இலங்கை மாணவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியுறவு செயலாளருக்கு இந்த உத்தரவு இன்று இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மாகாணத்தில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கை திரும்பி விட்டனர்.

எனினும் மேலும் பல மாணவர்கள் சீனாவின் மாகாண அரசாங்கம் விடுத்துள்ள பாதுகாப்பு நிலைகளை கடைப்பிடித்து அங்கேயே தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த மாகாணத்தில் வைரஸ் தொற்றியுள்ளதால் மரணங்கள் அதிகரித்துள்ளன.

அத்துடன் அது வேறு நாடுகளுக்கும் பரவிவருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனாவில் கற்கும் மாணவர்களின் பெற்றோரின் கரிசனையை உணர்ந்தே ஜனாதிபதி குறித்த மாணவர்களை இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Offers