பிரான்ஸ் மற்றும் மியன்மாருக்கான தூதுவர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஒப்புதல்

Report Print Ajith Ajith in அரசியல்

உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர மற்றும் பேராசிரியர் நளின் டி சில்வா ஆகியோரை பிரான்ஸ் மற்றும் மியன்மாருக்கான தூதுவர்களாக நியமிக்க நாடாளுமன்ற உயர்பதவிகளுக்கான குழு ஒப்புதல் வழங்கியுள்ளது

ஏற்கனவே இவர்களின் பெயர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்திருந்தார்.

இந்தநிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அண்மையில் கூடிய உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு இந்த இருவரையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தது.

இதன்போது அவர்கள் இருவரையும் குறித்த பதவிகளுக்கு நியமிக்க உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் திருப்பியழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...