கூட்டமைப்புடன் தேர்தல் கண்காணிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினர் சந்திப்பு

Report Print Malar in அரசியல்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இதன்போது அவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

அத்துடன் தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் இரா.சம்பந்தனிடம் கையளித்தனர்.

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு அவசியத்தினை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.