ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக நியமிக்கப்படவுள்ள சஜித் பிரேமதாச

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் இன்னும் முரண்பாடுகள் நீடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை முக்கிய சந்திப்பு ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.

இதன்போது முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக நியமிக்கப்படும் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படவுள்ளார். அத்துடன் அவரே முன்னணிக்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த யோசனைகள் நாளைய சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கட்சியின் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.