பிள்ளையான் - அசாத் மௌலானா இரகசியஉறவு அம்பலம்! மட்டக்களப்பிற்கு காத்திருக்கும் பேராபத்து

Report Print Malar in அரசியல்

சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு சிங்களம் தெரிந்த நிறைய தமிழர்களை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அசாத் மௌலானாவை ஏன் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நா. விஷ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகள் தலைஉயர வேண்டும் என்று குறியாக இருக்கலாம்.

இருந்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது, கடந்த நாட்களில் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை முதலமைச்சராக கொண்டு இயங்கிய காலத்தில், அவர் தனக்கென மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக அசாத் மௌலானாவை வைத்திருந்தார் என்பது ஒரு கருத்தாக இருந்தது.

அசாத் மௌலானா என்பவர் தமிழர் அல்ல ஒரு முஸ்லிம். இவர்களுக்கு ஒரு மொழிப்பெயர்ப்பு தேவையாக இருந்தால், இந்த கட்சி சிங்களம் தெரிந்த நிறைய தமிழர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏன் அசாத் மௌலானாவை பயன்படுத்தினார் என்பது என்று தெரியவில்லை?

ஆனால், இந்த மாவட்ட அரசாங்க அதிபராக காலாமதி பத்மநாதனை நியமித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.