ஐக்கிய தேசியக் கட்சி மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி மத்தியவங்கி முறி விற்பனை ஊடாக பொதுமக்களின் பணத்தை திருடியதாக அந்த கட்சியின் உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். இதன் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர்.

இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் கட்சியில் நீடிக்க கூடாது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.