அரசாங்கத்தின் சுயரூபம் வெளிவந்துவிட்டது! மனோ கணேசன் சாடல்

Report Print Murali Murali in அரசியல்

சமகால அரசாங்கத்தின் சுயரூபம் வெளிவந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசி கட்சியின் உட்பிரச்சினையை விரைவில் தீர்த்துக்கொண்டு புதிய கூட்டணியாக தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாங்கள் ஒருபோது அரசாங்கத்தின் பக்கம் செல்லமாடோம். எனினும் பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக அமைக்கும் கூட்டணியில் ஐக்கிய தேசிய கட்சியே பிரதான கட்சியாக இருக்கப்போகின்றது.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் பிரச்சினையை அவர்கள் விரைவாக தீர்த்துக்கொள்ளவேண்டும்.

அத்துடன் பல்வேறு பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றது.

சிங்கள மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வளங்கியே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இவர்களின் சுயரூபம் வெளிவந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.