சுமந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை - ஆதாரங்களை தேடும் சரவணபவன்

Report Print Murali Murali in அரசியல்

தனக்கு ஆசன ஒதுக்கீடு இல்லை என்று கூறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம.ஏ.சுமந்திரனுக்கு எவ்வித தகுதியும் இல்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியில் தேர்தல் நியமனக் குழு இருப்பதாகவும், அந்த குழுவே ஆசன ஒதுக்கீடு தொடர்பில் முடிவெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியில் சரவணபவனுக்கு ஆசன ஒதுக்கீடு இல்லையென தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.