வசந்த கரணகொட மீதான விசாரணையை இடைநிறுத்த கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்க ஆகியோர் மீதான விசாரணைகளை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இந்த ஆலோசனையை சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளது.

முன்னைய அரசாங்க காலத்திலேயே இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே அந்தக்குற்றச்சாட்டுக்கள் அரசியல் பழிவாங்கல் என்ற அடிப்படையில் நோக்கப்பட்டே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணைகள் முடியும் வரையிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பில் 2008ம் ஆண்டு 11 இளைஞர்களை கடத்தி காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரணகொட மற்றும் டிகேபி தஸநாயக்க ஆகியோர் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டு அண்மையில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers