ராஜிதவினால் உயிருக்கு அச்சுறுத்தல் என வெள்ளைவான் சாரதிகள் குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெள்ளைவேன் சாரதிகள் என ஜனாதிபதி தேர்தலின் போது கூறிய இருவரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தாமே வெள்ளை வான் கடத்தல்களின் போது சாரதிகளாக செயற்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த சாரதிகளை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

வெள்ளைவான் சாரதிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர்கள் தற்பொழுது தங்களது உயிருக்கு ராஜித தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவில், ராஜித சேனாரத்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

வெள்ளைவான் ஊடக சந்திப்பு தொடர்பில் உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடாது என அச்சுறுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers