மிலேனியம் செலேஞ் உடன்படிக்கை குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் தமது கருத்துக்களை இந்த உடன்படிக்கை தொடர்பில் அனுப்பிவைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள், தலைவர், எம்சிசி உடன்படிக்கை ஆய்வு குழு, நெலும்பியச, அலரி மாளிகை கொழும்பு 3 என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.

அல்லது mccreview@pmoffice.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் கருத்துக்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

இதன்போது கருத்துக்களை அனுப்புவோர் தமது சுயவிபரங்களையும் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

எம்சிசி உடன்படிக்கையை ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.

எனினும் அதனை கைச்சாத்திடுவது தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

Latest Offers