இலங்கையில் இந்துக்கள் நசுக்கப்படவில்லை! சுரேஸ் ஜோசி தெரிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தானை ஆகிய நாடுகளில் போன்று இலங்கையில் இந்துக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவில்லை என இந்திய ராஸ்ரியசமாயம்சேவக் சங்க்ஸ் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஸ் ஜோசி இந்த கருத்தை நாக்பூரில் வைத்து வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் இந்துக்களுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமை வழங்கலில் இடம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

எனினும் தாம் குறிப்பிட்ட ஏனைய நாடுகளை போன்று இலங்கையில் இந்துக்கள் நசுக்கப்படவில்லை என்று ஜோசி குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை சட்டத்தில் இடம் அமையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண சட்டங்களின்படி முஸ்லிம்களும் இந்திய குடியுரிமையை பெற முடியும். எனினும் ஏன் தற்போது காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்குகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்.