அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட தயாராகி வருகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மறக்க செய்து, குரல் பதிவுகளை காட்டி பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை கொள்ளையிட தயராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் பதவிக்கு வந்து 70 தினங்கள் கடந்துள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலையை குறைக்க முடியாது போயுள்ளது.

காய்கறி உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அத்துடன் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியாது.

விரைவில் தற்போதைய அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கும். இதனால் பேருந்து கட்டணங்கள் அதிகரித்து, மக்கள் பானையில் இருந்து அடுப்பில் விழும் நிலைமை ஏற்படும்.

ரஞ்சன் ராமாநாயக்கவின் குரல் பதிவுகள் காட்டி அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட தயாராகி வருகிறது.

மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு, பொதுத் தேர்தலில் வரை வெறுமனே காத்திருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...