இலங்கையில் கொரோனா வைரஸ்! நாமல் ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்
558Shares

கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையற்ற பீதி கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அண்மையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் செய்யப்படும் போலிப் பிரச்சாரங்கள் மற்றும் பீதி என்பனவற்றினால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை வாழ் அனைவரினதும் சுகாதாரத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் சிலரினால் உருவாக்கப்பட்டுள்ள தேவையற்ற பீதியில் மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


you may like this video