விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிட எந்த தடையுமில்லை - ஐங்கரநேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு எந்த தடையும் இல்லை என வடமாகாண முன்னாள் அமைச்சர் பீ.ஐங்கரநேசன் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஐங்கரநேசன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.

ஐங்கரநேசன் வட மாகாண விவசாயத்துறை அமைச்சராக கடமையாற்றிய போது, விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த சம்பவம் இருவருக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகளை ஏற்படுத்தியதுடன் நீதிமன்றம் வரை சென்றது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தால் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தாம் அரசியலில் இணைந்து ஈடுபட தடையாக இருக்காது என ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.