உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் புதிய அரசாங்கம்! அம்பலப்படுத்தும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுடன் தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் - மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு கலங்கம் ஏற்படுத்தவும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்த இந்த தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஒருவருடமாகின்ற நிலையிலும் இதுவரை பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் இன, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை அழிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த வருடம் ஏப்ரலில் நடத்தப்பட்ட தாக்குதலினால் மக்களிடையே இன ஐக்கியம் வீழ்ந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதமாகின்றபோது ஒரு வருடமாகவுள்ள நிலையில் பிரதான சூத்திரதாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் காரணமாகவே எமது அரசாங்கம் தோல்வியுற்றது. இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமாகின்ற போதிலும் பிரதான நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்படுகின்றது.

இந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இந்த அரசாங்கம் கைது செய்யாது என்பதை நிச்சயமாகக் கூறுகின்றேன்.

இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமைக்கான காரணம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலாகும். சஹ்ரானுக்கு ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அம்பலப்படுத்தப்பட்டது.

ஆகவே யார் இதற்குப் பின்னால் செயற்படுகிறார்கள் என்பது புலனாகின்றது. எமது அரசாங்கத்தை அவமானத்திற்கு உள்ளாக்குவதற்கான செயற்பாடாகவே இந்த தாக்குதலையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடுகின்ற போது, தாக்குதலுக்கு ஒருவருடமாகின்ற போதிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமைக்கான காரணத்தை சபையில் கோரவிருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...