எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Report Print Sumi in அரசியல்

யாழ்.மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது எதர்வரும் 31ஆம் திகதி நடைபெற உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில்,

யாழ்.மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது எதிர்வரும் 31.01.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.