சீனாவில் இருக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர சரியான வேலைத்திட்டம் அவசியம்

Report Print Steephen Steephen in அரசியல்

சீனாவில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வர சரியான வேலைத்திட்டம் அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு விமானப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சீனாவில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, அவர்களை தனியாக வைத்து உடல் நல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என ஹர்சன ராஜகருண மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சீன பிரஜைகளுக்கு பயண தடை விதிப்பதன் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை கட்டுப்படுத்த முடியாது என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளா்ர்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

Latest Offers

loading...