புதிய அரசாங்கத்திற்கு சாதாரண பிரச்சினையை கூட தீர்க்க முடியவில்லை!

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கத்திற்கு நாட்டின் சாதாரண பிரச்சினையை கூட தீர்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நிலைமையை சரி செய்ய மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்கள் ஜனாதிபதியையே தெரிவு செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சி விருப்பத்துடன் அரசாங்கத்தை ஒப்படைத்தது.

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லவர் என்று நாமம் சூட்டியே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக கொண்டு வந்தனர். எனினும் கடந்துள்ள இரண்டரை மாதத்தில் நாட்டில் காணப்படும் சாதாரண பிரச்சினைகளுக்கும் தீர்க்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ளது. தாம் எடுத்த தீர்மானம் சரியானதா இல்லையா என்பதை தீர்மானிக்க மக்களுக்கு முடியும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நல்லுறவு உருவாகி பல காலம் ஆகி விட்டது. அவர்கள் எப்போதும் ஒன்றாக இணைந்தே செயற்பட்டுள்ளனர். மக்களே பிரிந்து செயற்படுகின்றனர் எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers