சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்கா தூதுவர் ஹெலைய்னா டெப்லிட்ஸ் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஜோஹானா பிரிசேட்டும் கலந்து கொண்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.