அவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு சஜித் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

அவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் இந்தக் கோரிக்கை குறித்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அபாயத்தை ஓர் அவசர நிலைமையாகக் கருத்திற் கொண்டு நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டு மக்களுக்கு அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் பேதங்களை களைந்து அனைத்து தரப்பினரும் இணைந்து நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.