நல்லிணக்கம் தொடர்பில் கனடாவுடன் கலந்துரையாடல்! வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கனடாவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

கனடாவின் தென்னாசிய பிராந்தியத்துக்கான வெளியுறவு பணிப்பாளர் மற்றும் தூதுவர் டேவிட் ஹாட்மன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இன்று வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது இருதரப்பு பங்களிப்பு தொடர்பில் பொறிமுறை ஒன்றை செய்துக்கொள்வது தொடர்பில் இரண்டு தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.

தேசிய மொழி நிகழ்ச்சித்திட்டம் கண்ணிவெடியகற்றல் உட்பட்ட விடயங்களில் பங்களிப்பு குறித்தும் இதன்போது இரண்டு தரப்பினரும் கலந்துரையாடினர்;

நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடிய இரண்டு தரப்பினரும் பல்லின மக்களை கொண்டுள்ள இலங்கைக்கு கனடா பொருளாதார ராஜதந்திர நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் உதவியளிப்பது தொடர்பிலும் பேசப்பட்டது.