நாடாளுமன்ற விவாதத்திற்கு வரும் பிணை முறி மோசடி தடயவியல் அறிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான தடயவியல் அறிக்கை நாடாளுமன்ற விவாதத்துக்கு வருகிறது.

இந்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த அறிக்கை வெளியாகியுள்ள

நிலையில் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சில விடயங்கள் கசிந்துள்ளன.

இதன்படி இந்த அறிக்கையில் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் பேபேச்சுவல் ட்ரசரிசின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு இடையில் உட்சந்தை கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அர்ஜுன் மஹேந்திரனும் அர்ஜுன் அலோசியஸும் இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் பிரசாரங்களுக்காக பெரும் அளவு பணம் செலவிட்டுள்ளமையால் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.