சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி, நீதிமன்றில் நீதவான் எதிரில் இரகசிய வாக்கு மூலமொன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் சந்தேகநபராக சம்பிக்கவின் சாரதி திலும் துசித குமார என்பவர் கொழும்பு நீதவான் எதிரில் சம்பவம் தொடர்பில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இரகசிய வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதிக்குமாறு துசித குமார நீதிமன்றில் கடந்த 13ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers