3000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது! அங்கஜன் இராமநாதன்

Report Print Sumi in அரசியல்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கிராமத்திற்கு ஒரு வீடு என்னும் தொனிப்பொருளுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்திற்கு 3000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது மக்கள் தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்து தம்மிடம் உதவி கேட்டு வருவதாகவும் வீட்டுத்திட்டம் கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டு கட்டிமுடிக்காதவர்களும் புதிதாக வீட்டுத்திட்டம் பெறுபவர்களும் தம்மிடம் கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இதுமாத்திரமன்றி, குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தாம் அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நிரந்தர நியமனம் கோரும் சுகாதார தொண்டர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை ஆளுநருடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

Latest Offers