தலைவராக நியமிக்கப்பட்டாரா சஜித்! ரவி கருணாநாயக்க வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என்று கட்சியின் உதவி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின்போது சில உறுப்பினர்கள் பௌத்த நாடு மற்றும் சிங்களர்கள் விடயங்களில் வெளியிட்ட கருத்துக்களே ஐக்கிய தேசியக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.

முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், சுஜீவ சேனசிங்க ஆகியோரை குறித்தே ரவி கருணாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

இதேவேளை இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். எனினும் ஏனைய மதங்களுக்கும் இலங்கையில் மதிப்பளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்

Latest Offers