கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

பொது மக்களுக்கு அரசாங்கம் முகக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிக லாபம் உழைக்கும் மாபியாக்களின் முயற்சிகளை உடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச சில விற்பனையாளர்கள் முகக்கவச மாபியா மற்றும் மருந்தக மாபியா நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

15 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாக தெரிவித்து இவர்கள் முகக்கவசங்களின் விலைகளை அதிகரிக்க முயல்கின்றனர்.

எனவே முகக்கவசங்களை இலவசமாக வழங்கி அரசாங்கம் இவர்களின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Latest Offers