அரச செலவுகளுக்காக புதிய குறை நிரப்பு மதிப்பீட்டு சட்டமூலம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரச செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்காக புதிய குறை நிரப்பு மதிப்பீட்டு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கடந்த அரசாங்கம் ஒப்பந்தகார்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய 13 ஆயிரம் கோடியை செலுத்துவதற்காக உள்ளிட்ட அரச செலவினங்களுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்ட குறை நிரப்பு மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு இந்த குறை நிரப்பு மதிப்பீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார்.

தற்போது பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் வரையறை இதன்மூலம் மாற்றப்படும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.