ஐ.தே.கவில் முக்கிய புள்ளிகள் இருவரின் உறுப்புரிமை நீக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோரின் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரின் உறுப்புரிமைகள் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இருவரை தவிர ஏனைய பழைய உறுப்பினர்கள் புதிய செயற்குழுவுக்கு நியமிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாலை இடம்பெறும் ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்

Latest Offers