ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவதற்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த செயற்குழு கூட்டத்தை சஜித் பிரேமதாச உட்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

செயற்குழுவில் இருந்து சிலர் நீக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

Latest Offers