60 நாட்களில் நாட்டை சரியான வழிக்கு கொண்டு வர முடிந்துள்ளது: ஷெகான் சேமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

60 மாதங்கள் கட்டாகலியாக சென்ற நாட்டை 60 தினங்களில் சரியான வழிக்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

நாடு பின்நோக்கி கொண்டு சென்று வறிய மக்களை மாத்திரமல்ல வறுமை கோட்டுக்கு மேல் வாழும் மக்களையும் பாதிப்புக்கு உள்ளாகி முன்னெடுத்துச் சென்ற ஆட்சியை தோற்கடித்து மக்கள் தீர்மானகரமான தீர்ப்பை வழங்கினர்.

இந்த தீர்மானத்தின் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

சுமார் 60 நாட்களில் நாட்டுக்கு மக்களுக்கும் அதன் பிரதிபலன்கள் கிடைத்து வருகிறது எனவும் ஷெகான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.