வெற்றிக்கான திட்டத்தை அமுல்படுத்த அவசரமாக இலங்கை வரும் பசில்

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபடவுள்ளார்.

இதற்காக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பவுள்ளார். இன்றிரவு பசில் ராஜபக்ஷ இலங்கையை வந்தடைவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாரிய வேலைத்திட்டங்களை பசில் முன்னெடுத்திருந்தார்.

இதனையடுத்து இலங்கை - அமெரிக்க பிரஜாவுரியை கொண்டுள்ள பசில், அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதத்தில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதன்போது கட்சியின் வெற்றிக்காக பணியாற்றும் நோக்கில் அவர் நாடு திருப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்த பசில் டிசம்பர் மாதம் முதல் வாரம் அமெரக்கா நோக்கி சென்றிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை பசில் ஒழுங்குபடுத்தவுள்ளார் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...