பொதுத் தேர்தலின் பின்னரே வேலைவாய்ப்புக்கள் வழங்கும் சாத்தியம்!

Report Print Rakesh in அரசியல்

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்குத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோதும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் சாத்தியம் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நியமனங்களுக்கான திறைசேரி அனுமதி இன்னமும் பெறப்படவில்லை என்றும், அந்த அனுமதிக்கான விண்ணப்பமும் இதுவரை அனுப்பப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

நாடு முழுவதும் உள்ள ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்போடு தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாகவும், கட்சி அலுவலகங்கள் ஊடாகவும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த நியமனங்களைத் தேர்தலுக்கு முன்னர் வழங்கும் சாத்தியம் இல்லை என்றும், இந்தத் தரவுகள் தேர்தலுக்கே பயன்படும் என்றும் கூறப்படுகின்றது.

ஒரு இலட்சம் பேருக்கு நியமனம் வழங்கப்பட்டு அவர்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 22 ஆயிரம் ரூபா வீதம் வேதனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாதம் ஒன்றுக்கு 220 கோடி ரூபா தேவைப்படும். கடந்த ஆண்டு நடந்த பணிகளுக்கான கொடுப்பனவுகளே வழங்கப்படாத நிலைமையே தற்போது உள்ளது. அதனால் இவ்வாறான பெரும் தொகை நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Latest Offers