செயற்குழுவில் இருந்து தம்மை நீக்கியமைக்கு உரிய காரணங்கள் எவையும் இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

செயற்குழுவில் இருந்து தம்மை நீக்கியமைக்கு உரிய காரணங்கள் எவையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தம்மால் இதனை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நான் எப்போதும் கட்சியின் நன்மைக்காகவே பாடுபட்டேன். இது தனிப்பட்ட விடயம் என்பதை விட கட்சிக்கு பொறுப்பான விடயமாகும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று கூடிய கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாசவுக்கு இந்த பதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...