சுதந்திரக் கட்சித் தனித்து போட்டியிட்டால் 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும்! ரொஷான் ரணசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமாயின் முழு நாட்டிலும் நான்கு ஆசனங்களை மாத்திரமே வென்றெடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலரது சதித்திட்டம் காரணமாகவே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

இந்த சதித்திட்டங்கள் காரணமாகவே நாடு சமூக ரீதியாக சீர்குலைந்து, அடிப்படைவாதிகள், இனவாதிகள் தலைத்தூக்கும் நிலைமைக்கு சென்றது. சதித்திட்டங்கள் இல்லாத பயணத்தை முன்னெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற உதவதாக முன்னாள் ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். மிகவும் நல்லது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க இணையுங்கள்.

எனினும் கூட்டணியில் பெரும் பங்கை கேட்க எதிர்பார்க்க வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் நான்கு ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றாது. நான் கூறினேன் என்று இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...