கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன! சுதந்திரக் கட்சி தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன ஐக்கிய முன்னணியில் காணப்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு நேற்று நடைபெற்ற சம்மேளனத்தில் ஏகமானதாக இணக்கம் காணப்பட்டது.

முன்னணியின் பெயர் மாற்றப்பட்டாலும் நாற்காலி சின்னம் மாற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...