ஐ.தே.கட்சியில் எவராவது விசர்பிடித்து ஆடினால் மக்களுக்கும் பாதிப்பு! சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் எவராவது விசர்பிடித்து ஆடினால் அது இந்த நாட்டு மக்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டமை சம்பந்தமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், தானும் அதனை ஊடகங்கள் வாயிலாவே அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை எனவே கட்சிக்கு வாக்களிக்க போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது தலைவரின் சொத்தாக இருக்கக் கூடாது. செயற்குழு உறுப்பினர்களை தனிநபர் ஒருவர் நியமிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...