இலங்கைக்கு ஆபத்து - எச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிற்கு மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் அரசியல் பேசுவதை நிறுத்தி விட்டு இந்த வைரஸ் குறித்து ஆராயப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் பேசினால் கொரோனா தொடர்பான தகவல்கள் மூடி மறைக்கப்படும். எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஊடக சந்திப்புக்களை மேற்கொண்டு அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கொரோனா வைரஸை தவிர்த்து வேறு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கேள்வி கேட்பதனை தவிர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

loading...