கோட்டாபய பதவியேற்ற பின் முதன் முறையாக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடொன்றின் வெளிவிவகார அமைச்சர்!

Report Print Ajith Ajith in அரசியல்

லக்சம்பேர்க் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன் எசெல்போர்ன் இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஜீன் எசெல்போர்ன் ஐரொப்பாவில் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சராக பதவிவகிப்பவர்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதும் முதலாவதாக இலங்கைக்கு வருகைத்தந்த ஐரோப்பிய நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சருமாவார்.

இந்த நிலையில் அவர் இலங்கையில் இருக்கும் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்தவையும் சந்திக்கவுள்ளார்.

Latest Offers

loading...