மகிந்தவை சந்தித்தார் ஜீன் எசல்பன்!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையுடன் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதிச் சலுகை என்பவற்றுக்கும் அப்பாலான உறவுகளைப் பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக லக்ஸ்பர்க் நாட்டின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீன் எசல்பன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பர்க் நாட்டின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீன் எசல்பன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனது விஜயத்தின் ஓரங்கமாக அவர் இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சின் மூத்த ஆலோசகரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார ஆலோசகரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்காக புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தற்போதைய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு நடந்த வர்த்தகமானது 1.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் அவற்றை அதிகரிப்பதற்கான பேச்சு இதன்போது நடத்தப்பட்டதாக பிரதமரின் ஊடக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

லக்ஸம்பர்க் நாட்டின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சராக ஜீன் எசல்பன் நியமிக்கப்பட்ட நிலையில் அவரது முதலாவது இலங்கைக்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...