இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற மகிந்த முயற்சித்தாரா?

Report Print Ajith Ajith in அரசியல்

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முனைந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஸாரா ஜெயரட்ன இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

எனினும் இந்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

இதன்போது படையுதவியுடன் ஆட்சியை கைப்பற்ற மகிந்த ராஜபக்ச முனைந்தார் என்று மங்கள சமரவீர முறையிட்டிருந்தார்.


you may like this video

Latest Offers

loading...