தமது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் மக்களுக்கு அறிவிக்கவுள்ள சஜித்

Report Print Ajith Ajith in அரசியல்

தமது அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை அவர் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவால் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பதவிகளை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள சஜித் தரப்பினர் செயற்குழுவின் முடிவுகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

வெறுமனே அது வாய்ப்பேச்சாக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.