போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு - ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

போதைப் பொருள் வர்த்தகத்துடன் இலங்கையின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் முழு நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ பண்டாரகம பிரதேசத்தில் சுமார் 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மாத்திரமல்ல, ஆயுதங்களும் பிடிப்பட்டன. இந்த போதைப் பொருள் எங்கு செல்கிறது?. யார் இதனை கடத்தி வருகின்றனர்?. உங்கள் பிள்ளைகள் இதற்கு அடிமையாகி இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனரா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா?.

பாடசாலைகளுக்கு எதிராக எந்தளவுக்கு இப்படியான வியாபாரத்தை செய்கின்றனர். எமது பிள்ளைகள் எவரும் பாதுகாப்பாக இல்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றனர். இவற்றின் வேரை தேடினால் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. அப்படியென்றால் இதனை யாரிடம் சொல்வது?. மக்களின் வாழ்கை அழிக்கவும் சமூகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளவும் பல வேலைகள் நாட்டில் நடக்கின்றன எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.