ஐ.தே.கட்சியின் தலைமையிலான கூட்டணியின் செயலாளர் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியின் செயலாளர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கும் திட்டம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்தல் மற்றும் தேர்தலின் பின்னர் தேசிய பட்டியலில் தமக்கு தேவையான வகையில் உறுப்பினர்களை தெரிவு செய்வதே இந்த நியமனத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு சஜித் பிரேமதாச அணியினருக்கு போதுமான முன்னுரிமை கொடுத்து அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.