மகிந்தவுடன் டக்ளஸ் மற்றும் தொண்டா இந்தியாவுக்கு விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விஜயத்தின் போது மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறுப்படுகிறது.

இந்திய பிரதமருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடல் எல்லை மீறுதல் காரணமாக இந்திய மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினையாக மாறியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளன.