1300 பேருக்கு நியமனம் வழங்க முடியாது - ஜனாதிபதியின் செயலாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சிகளை பெற்ற ஆயிரத்து 300 பேருக்கு தொழில் நியமனங்களை வழங்க முடியாது என ஜனாதிபதி செயலகம் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

எனினும் இடையில் நிறுத்தப்பட்ட பயிற்சிகளை பூர்த்தி செய்ய வசதிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி செயலாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரின் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.

தமக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கடந்த அரசாங்கம் உறுதியளித்திருந்தது என மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் வழங்கிய நியமன கடிதங்களை அடிப்படையாக கொண்டு பணி நிரந்தரத்தை வழங்க முடியாது என ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.