சஜித் கட்சியை பிளவுபடுத்தமாட்டார்: பீ. ஹெரிசன்

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாச எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்த மாட்டார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்து அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விரிவான கூட்டணியாக நாங்கள் தேர்தலில் போட்டியிடவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சஜித் பிரேமதாச உட்பட அனைவரது எதிர்காலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தங்கியிருப்பதால் அவர் எந்த விதத்திலும் கட்சியை பிளவுபடுத்த மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.