ஐக்கிய தேசிய கட்சியை வெல்வது இலகு :விமலவீர திஸ்ஸாநாயக்க

Report Print Varunan in அரசியல்

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச் சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த கட்சியில் தலைவர் தான் முழு அதிகாரம் படைத்தவர். ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை.பெயருக்கு ஜனநாயகம் மட்டுமே உள்ளது.

இந்த கட்சியில் தான்தோன்றித்தனமாக தலைவர் மாத்திரமே முடிவுகளை எடுக்கின்றார். இதனால் எமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவாக இருக்கும், என கூறியுள்ளார்.